ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர் மந்திர் மற்றும் ஹனுமான் மந்திர், செகந்தராபாத்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர் மந்திர் மற்றும் ஹனுமான் மந்திர் ஸ்கந்தகிரி, செகந்தராபாதில் அமைந்துள்ளது. இந்த ஆலயங்கள் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கும், பகவத் பாதர் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கும் அர்ப்பணிக்கபட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது. சாநித்தியம் மிக்க, தனிச் சிறப்பு வாய்ந்த ஆஞ்சநேய ஸ்வாமியின் திவ்ய விக்ரகம் இந்த இரட்டை ஊர்களில் (ஹைதராபாத், செகந்தராபாத்) காணக் கிடைக்காத ஒரு அற்புதமாகும்.
|
தினசரி நடக்கும் வழக்கமான பூஜைகளைத் தவிர, விசேஷமான அபிஷேகங்களும், சிறப்பு அர்ச்சனைகளும் பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு நடைபெறுகிறது.
ஸ்ரீ ஆதி சங்கர மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகளின் சன்னதிகள் தவிர ஸ்ரீ கணேசப் பெருமான், குரு பாதுகை, மற்றும் நாக தேவதைகளுக்கு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளது. பல் வேறு பண்டிகைகளும், நவராத்திரி, ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி, ஸ்ரீ சங்கர ஜெயந்தி, பூஜ்யஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் ஜெயந்திகள் மிகச் சிறப்பான முறையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தர்ம காரியங்களுக்கு மையமாக இருந்து பல பக்தர்களை கவர்ந்திழுக்கிறது. இசைக் கச்சேரிகள், உபன்யாசங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோவில் வளாகத்தில் உள்ள பிரசங்க கூடத்தில் நடைபெறுகிறது. விசேஷமான தினங்களில் பிரசாதமும், அன்னதானமும் விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீ காஞ்சி காமகோடி கணினி மையம் இங்குள்ள ஏழை மற்றும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி கொடுக்கிறது.
பக்தர்களுக்கான வசதிகள்
சனாதன தர்மம் சார்ந்த பல் வேறு கலை நிகழ்சிகளை கண்டு களிக்க சுமார் 300 பேர் அமரக்கூடிய ஒரு பெரிய கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
யாத்ரீகர்கள் தங்குவதற்காக இரண்டு அறைகளும் உள்ளன.
இருப்பிடம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர் மந்திர் மற்றும் ஹனுமான் மந்திர்,
ஸ்கந்தகிரி, பத்மராவ் நகர், SP கல்லூரி பின்புறம், செகந்தராபாத், ஆந்திரபிரதேஷ் 500061.
தூரம்:
பேருந்து நிலையம்: 5 கி.மீ (செகந்தராபாத்) மற்றும் 15 கி.மீ (ஹைதராபாத்)
ரயில் நிலையம்: 2 கி.மீ (செகந்தராபாத்) மற்றும் 10 கி.மீ (ஹைதராபாத்)
விமான நிலையம்: 50 கி.மீ
தொடர்பு கொள்ள விபரம்
மேலும் விபரங்களுக்கு,
ஸ்ரீ. ஜெய்ஷங்கர் பாலகோபால்/ஸ்ரீ. குமாரவேலு
தொலைபேசி: 040 27504300
மின்னஞ்சல்: jaishankarbalagopaal@gmail.com
ஹனுமான் சன்னதி |
ஸ்ரீ ஆதி சங்கர பாதுகா மந்திர் |
ஸ்ரீ ஆதி சங்கரர் விக்ரகம் |
பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனை |
நாக தேவதை |
ஸ்ரீ கணேசர் |
வ்ருக்ஷ ராஜாய நமஹ - அஷ்வத விருஷம் |
பக்தர்கள் நாக தேவதைக்கு செய்யும் பூஜை |
பிரசங்கக் கூடம் |
பூஜ்ய ஸ்ரீ ஆதி சங்கரா, ஸ்ரீ மகாஸ்வாமிகள் மற்றும் அன்னை காமாக்ஷி அம்மன் படங்கள் |
பூஜ்ய ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் படங்கள் |
நிகழ்ச்சி நடக்கும் கூடம் |
அலுவலகம் |
வரவேற்பு அறை |